துபாய்: பிரிவினைவாத கும்பல் (Separatist Group) என சந்தேகப்படும் சில மர்ம நபர்கள் இன்று (டிச.15) ஈரானில் உள்ள காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலில் காவல்துறையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பலர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு ஈரானில் உள்ள காவல் நிலையம் மீது இன்று (டிச.15) சில மர்ம நபர்கள், திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் வாயிலாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதில், பிரிவினைவாத கும்பல் என சந்தேகப்படும்படி இருந்த சில துப்பாக்கி ஏந்திய நபர்கள், திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்த பயங்கர தாக்குதலில் காவல்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் அலி ரெசா மர்ஹெமதி கூறுகையில், “இன்று அதிகாலை 2 மணி அளவில் ராஸ்க் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் காவல்துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.