டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸ் குழு தாக்குதலைத் தொடர்ந்து போர் தொடங்கியது. தற்போது இன்று (அக்.24) 18வது நாளாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.22) வரை பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது படி காசா பகுதியில் 4,651 பேர் இறந்து இருக்கலாம் எனவும், 14,254 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவித்து இருந்தனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவை அளித்து இருந்தன. இந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் பல நாடுகள் தன்னார்வல அமைப்புகள் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன.
அக்டோபர் 17ஆம் தேதி காசாவில் அமைந்துள்ள அல்-அஹில் மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மருத்துவமனை முழுவதும் சேதம் அடைந்து பல நூறு பேர் வரை உயிரிழந்தனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக மருத்துவமனை பாதிக்கப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டியிருந்தனர்.
இஸ்ரேல் இராணுவம் தரப்பில் ஹமாஸின் தவறுதலான வான்வழித் தாக்குதல் காரணமாக காசாவிலுள்ள மருத்துவமனை பாதிப்புக்கு உள்ளாகியதாகக் குற்றம் சாட்டியிருந்தனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பல நாட்கள் தங்கள் கண்டனங்களையும், இரங்கலையும் தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க:17வது நாளாக தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்! மனிதாபிமான உதவிகளை தேடி அழையும் மக்கள்!
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஞாயிற்றுக்கிழமை (அக்.22) தெரிவிக்கும் போது, 6.5 டன் மருத்துவ உதவி பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களைப் பாலஸ்தீன மக்களுக்காக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஐஏஎப் சி 17 ரக போக்குவரத்து விமானம் மூலம் எகிப்திலுள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் அக்டோபர் 18ஆம் தேதி இஸ்ரேல் பயணம் செய்து போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பில் பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணம் செய்தார். மேலும் காசாவிலுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார். மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் குறித்துப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஹமாஸை வளர்த்தெடுத்தது இஸ்ரேலா? யாசர் அராபத்துக்கு செய்த துரோகம்..! மார்பில் பாயும் வளர்த்த கடா?