வாஷிங்டன்: உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். அப்போது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.
அவரிடம் பேசிய மோடி, ”இது போருக்கான காலம் அல்ல. இதுகுறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளோம். பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும். நமது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை உலகம் அறிந்துள்ளது” என கூறினார்.
இதனையடுத்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா நன்கு அறிந்துள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வந்தாலும், பேச்சுவார்த்தையில் ஈடுபட உக்ரைன் மறுப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவின் நிலைப்பாட்டை போர்க்களத்தில் அடையவே உக்ரைன் முயற்சிக்கிறது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நல்லுறவு மிகவும் வலுவடைந்து வருகிறது” என தெரிவித்தார். உக்ரைன் - ரஷ்யா போருக்கு பிறகு பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் நேரில் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க:பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 72வது பிறந்தநாள்