வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான ஜோ பைடன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்தவர். பைடன் துணை அதிபராக இருந்தபோது அரசுக்கு சொந்தமான பல முக்கிய ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) அதிபர் பைடனின் வீடு மற்றும் தனி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. கடந்த 20ஆம் தேதி பைடனின் வீட்டில் சுமார் 13 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனையின்போது ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனும் வீட்டில் இல்லை, அவர்கள் வார விடுமுறையை கழிக்க சென்றிருந்ததாக தெரிகிறது. இந்த சோதனை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.