தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Somalia Bomb Blast: சோமாலியாவில் விளையாட்டு மைதானத்தில் குண்டுவெடிப்பு: 27 சிறுவர்கள் மரணம்! - சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்

சோமாலியாவில் விளையாட்டு மைதானத்தில் பழைய குண்டு வெடித்ததில் விளையாடிக் கொண்டிருந்த 27 சிறுவர்கள் உயிரிழந்தனர். அந்த குண்டு கடந்த காலத்தில் உள்நாட்டுப் போரின்போது வீசப்பட்டது என தெரியவந்தது.

Explosion
சோமாலியா

By

Published : Jun 11, 2023, 2:36 PM IST

சோமாலியா:சோமாலியாவின் கிழக்கு ஷபெல்லே பகுதியில் உள்ள முரலே என்ற கிராமத்தில் நேற்று(ஜூன் 10) கால்பந்து விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்துப் பார்த்தனர். அது என்னவென்ற யூகிப்பதற்குள், அந்த மர்மப்பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த வெடிவிபத்தில் அந்த மைதானத்தில் இருந்த சிறுவர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொத்தம் 27 சிறுவர்கள் பலியானதாக தெரிகிறது. 53 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவர்கள் கையில் எடுத்த அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் நடந்த உள்நாட்டுப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரியவந்தது.

இதையும் படிங்க: Amazon forest plane crash: அமேசான் காட்டில் காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பிறகு மீட்பு

முன்னதாக கடந்த 9ஆம் தேதி சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உணவகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 80 பேர் உணவகத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதல் 9ஆம் தேதி இரவு முதல் 10ஆம் தேதி காலை வரை நடந்ததாக தெரிகிறது. தீவிரவாத அமைப்பான அல்-காய்தாவின் இணை நிறுவனமாக அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதேபோல் கடந்த வாரம் சோமாலியாவில் புலமாரரில் உள்ள பாதுகாப்புப் படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உகாண்டாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் 54 பேர் உயிரிழந்தனர். உகாண்டா ராணுவத்தினர் அல் ஷபாப் தீவிரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுக்கு உதவி வந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. முன்பு அல் ஷாபாப் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகளை சோமாலியா அரசு நம்பி இருந்தது. ஆனால், ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டன. அதன் பிறகு உகாண்டா ராணுவத்தினர் சோமாலியா அரசுக்கு உதவி வந்தனர்.

சோமாலியாவில் அல் ஷாபாப் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உணவகங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அல் ஷாபாப் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் மொகதிசுவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Suez Canal : சுயஸ் கால்வாயில் பழுதான சரக்கு கப்பல்.. கப்பல் போக்குவரத்து பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details