சான் பிரான்சிஸ்கோ:ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தை வாங்க போவதாக மில்லியனர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கப்போவதாக தெரிவித்தார். இருப்பினும் சில நாட்களில் ட்விட்டர் அதன் கணக்குகள் குறித்த விவரங்களை தர மறுப்பதாக தெரிவித்து ட்விட்டர் வாங்குவதில் இருந்து பின் வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அந்நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டி ட்விட்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்-28 ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இல்லையென்றால் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டது.