இந்தோனேசியா:இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வடக்கு மாலுகுவில் இன்று (ஏப்ரல் 5) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 எனப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! - நிலநடுக்கம் பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள வடக்கு மாலுகுவில் 6.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
எனினும், பொதுமக்கள் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 13 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்