துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக பதிவான நிலையில் பல உயிர் சேதங்களுடன் இந்தச் சம்பவம் உலகையே அச்சுறுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது தெற்காசிய நாடுகளில் பல நாடுகள் நிலநடுக்கத்தின் வீரியத்தை உணரத்தொடங்கியுள்ளது. அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சமடைந்து தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் பிலால் ஃபைஷி கூறுகையில், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பாக பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் உயிர் பாதிப்புகள் 11ஆக அதிகரித்துள்ளது. இது மிட்டுமின்றி நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து நகரமே ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5ஆக அளவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் செய்தி தொடர்பாளர் ஷராஃப்த் ஜமர் அமர், துரதிர்ஷ்டவசமாக பல பகுதிகளில் கடுமையான நிலநடுக்கத்தினால் பாதிப்படைந்துள்ளது என்றும்; 2 உயிர் சேதங்களுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே விளைவுகளை சந்தித்த காபூல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு வாசியான ஷஃபிஃபுல்லா அஷிமி நிலநடுக்கம் உணரப்பட்ட பொது மக்கள் செய்வது அறியாமல் கதறி, அலறியடித்து வீதிக்கு வந்தனர் என்று தன் அனுபவங்களைப் பகிர்கிறார். மேலும் மற்றொரு குடியிருப்புவாசியான அஷிஷ் அஹமத் தன் வாழ்நாளில், இந்த அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை உணர்வது இதுவே முதல்முறையாகும் என்றும்; மீண்டும் வீட்டிற்குள் செல்ல தைரியம் வரவில்லை என்றும் கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஜூர்ம் பகுதி, பாகிஸ்தான் மற்றும் தஜிஸ்கிஸ்தான் எல்லையோரப் பகுதி மற்றும் ஹிந்துகுஷ் மலைப் பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாட்டின் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.