இஸ்லாமாபாத்:ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெராட் பகுதியில் இரண்டு முறை 6.3 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 15 நபர்கள் வரை உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், 40 மேற்பட்டோர் படுகாயமடைந்து இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த தேசிய பேரிடர் ஆணைய அதிகாரி முகமது அப்துல்லா ஜான் கூறியுள்ளார்.
ஹெராட் பகுதியில் வசித்து வரும் அப்துல் சகோர் சமாதி, இன்று மதிய வேளையில் குறைந்தது 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என கூறியுள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின் படி, "இன்று மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 என்ற ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு ஹெராத் பகுதியின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 5.5 என்ற அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் வரைபடத்தின் படி, இந்த பகுதியில் 7 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு - வடமேற்கு பகுதியில் 6.3 என்ற ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின் 6.3 என்ற அளவுகோளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிந்தா ஜான் என்ற பகுதியின் வடக்கு - வடகிழக்கு திசையில் 6.3 என்ற அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பின் சிந்தா ஜான் பகுதியின் வடக்கு - வடகிழக்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.