கொழும்பு:இலங்கையில் நடைபெற்ற அரசியல் நெருக்கடி காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறி, தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக சில நாள்கள் செயல்பட்டு வந்தார்.
தொடர்ந்து, ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் 8ஆவது அதிபராக தேர்வுசெய்யப்பட்டார். இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர் தினேஷ் குணவர்தனே 15ஆவது பிரதமராக இன்று (ஜூலை 22) தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.