நியூயார்க்: வரும் 24ஆம் தேதி உலகெங்கிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் நேற்று (அக் 20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “நியூயார்க் நகரில் தீபாவளியை முன்னிட்டு அடுத்தாண்டு (2023) முதல் பொதுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
தீபாவளி குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கப் போகிறோம். இனி தீபாவளியை கொண்டாடுவது என்றால் என்ன என்பதையும், அந்த நாளை போலவே தங்களுக்குள் எப்படி ஒளி சுடரையேற்றுவது என்பது பற்றியும் குழந்தைகள் பேசத் தொடங்குவார்கள்” என கூறினார்.
தொடர்ந்து மாநில சட்டப்பேரவை உறுப்பினரான முதல் தெற்காசிய அமெரிக்க பெண் ஜெனிபர் ராஜ்குமார், “உலகெங்கிலும் உள்ள ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள், இருளின் மீது ஒளி மற்றும் தீமையின் மீது நன்மை என்ற அடையாள வெற்றியைக் குறிக்கிறது.