வாஷிங்டன்: அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தில் "ஈக்வாலிட்டி லேப்(Equality Lab)" என்னும் பட்டியலின உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கு கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருந்தரங்கை கூகுள் நியூஸ் பிரிவு திட்ட மேலாளர் தனுஜா குப்தா ஏற்பாடு செய்தார்.
ஆனால், இந்த கருந்தரங்கிற்கு மூத்த அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கூகுள் நிறுவனம் சார்பில் தனுஜா குப்தாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து தனுஜா குப்தா தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை 15,000 ஊழியர்களுக்கு இ-மெயில் செய்தார்.
அதில், "கூகுள் நிறுவனத்தில் நான் பாதுகாப்பாக உணரவில்லை என்பதால் ராஜினாமா செய்கிறேன். இங்கு 11 ஆண்டுகளாகப் பணியாற்றிய எனக்கு ராஜினாமா செய்ய பல காரணங்கள் இருந்தபோதிலும் சாதியப் பாகுபாட்டால் மட்டுமே இதை செய்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக "ஈக்வாலிட்டி லேப்" நிர்வாக இயக்குநர் தேன்மொழி சௌந்தரராஜன் கூகுள் நிறுவனத்திற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். இதுகுறித்து தேன்மொழி, "பணியிடத்தில் சாதி, சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் கருத்தரங்கை ரத்து செய்துள்ளது.