இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமெரிக்காவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நியூயார்க் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 23) சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடக்கு அமெரிக்கவின் தெலுங்கு சங்கம் (TANA) ஏற்பாடு செய்த நிகழ்வு வர்ஜினீயாவில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. அதில், தலைமை நீதிபதி என்வி ரமணா பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில், பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா, எம்.டி.சுசித்ரா எல்லா, இந்திய தூதரக ஜெனரல் ரந்தீர் ஜெய்ஷ்வால், தெலுங்கு சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜெய் தல்லூரி, சங்கத்தின் பிரமுகர்களான வலிவெட்டி பிரம்மாஜி, வசிரெட்டி வம்சி, அரவிந்த் ஆகியோர் அவரை வரவேற்றனர்.