பீஜிங் : சீனா சிக்கலான மற்றும் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளதாக அந்நாடின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மோசமான அசாத்தியமான சூழல்களை எதிர்கொள்ள மக்கள் தயராக இருக்குமாறு ஜி ஜின்பிங் எச்சரித்து உள்ளார்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளார் இந்நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கலான மற்றும் அசாத்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சினைகளை சீனா எதிர்கொண்டு வருவதாக தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சீன ஊடகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு முன்னணி, நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் வெற்றி பெறுவதற்கு போதுமான நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
மேலும் மோசமான மற்றும் தீவிரமான சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், அதிக காற்று, நீர் மாசுபாடு மற்றும் ஆபத்தான புயல்கள் போன்ற பெரும் பேரிடர் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.
சீனாவில் தேசிய பாதுகாப்பு அமைப்பு மற்றும் திறனை நவீனமயமாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உண்மையான போருக்கு தயாராக இருக்க வேண்டும் மற்றும் நடைமுறை சிக்கல்களை கையாள்வதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் அவர் வலியுறுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.