இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "பயங்கரவாதம் என்பது அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான உலகாளவிய சவாலாகவே கருதப்பட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் பெரும் முயற்சிகளையும் தியாகங்களையும் செய்துள்ளது. செய்து வருகிறது. சர்வதேச சமூகம் அதை அங்கீகரித்து, மதிக்க வேண்டும். பெய்ஜிங் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது" என கூறியுள்ளார்.
'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இஸ்லாமாபாத் தியாகம் செய்துள்ளது' - பெய்ஜிங் புகழாரம்!
பெய்ஜிங்: பயங்கரவாதத்தை எதிர்த்து களத்தில் பெரும் போராட்டங்களை செய்துவரும் பாகிஸ்தானின் தியாகங்களை சர்வதேச சமூகம் அங்கீகரித்து மதிக்க முன்வரவேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இஸ்லாமாபாத் தியாகங்களை செய்துள்ளதாக பெய்ஜிங் புகழாரம்!
அண்மையில் நடைபெற்ற அமெரிக்கா - இந்தியா இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவின் 17ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் அரசு அந்நாட்டிற்குள் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டிய அவசர அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது கவனிக்கத்தக்கது.