தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியாவிலிருந்து செல்லும் ஆஸ்திரேலியர்கள் அந்நாட்டிற்குள் நுழைய தடை - கரோனா பாதுகாப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர்கள் இந்தியாவில் 14 நாள்கள் இருந்தால் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

ஆஸ்திரேலியர்கள்
Corona

By

Published : May 2, 2021, 5:07 PM IST

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் 14 நாள்கள் இந்தியாவில் இருக்க நேரிட்டால் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தற்காலிகமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்றால், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டியிருக்கும்.

நேற்று முன்தினம் (ஏப். 30) நடந்த தேசிய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த நடவடிக்கை ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பயணிகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details