இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி பாகிஸ்தானில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன. இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு எம்.பி.க்களும் வலியுறுத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அவரது அரசுக்க எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
இந்நிலையில் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இஸ்லாமாபாத்தில் மாபெரும் பேரணி ஒன்றில் உரையாற்றினார்.
அப்போது, “வெளிநாட்டு சக்திகள், உள்நாட்டு அரசியல்வாதிகளை பயன்படுத்துகின்றன” என்றார். மேலும், “வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதில் பணம் ஒரு ஆயுதமாக இருப்பதாக கூறிய இம்ரான் கான், வெளியுறவுக் கொள்கையை சீர் செய்ய போவதாகவும் கூறினார்.