பெஷாவர் : பாகிஸ்தான், கைபர் பக்துன்கவா (Khyber Pakhtunkhwa) மாகாணம் தேரா இஸ்மயில் கான் (Dera Ismail Khan) அருகே ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்துடன் ராணுவ தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வெடிக்கச் செய்து தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 23 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய பதிலடி தாக்குதலில் அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர சம்பவத்தில் முதலில் 6 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கோர சம்பவத்தில் 16க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டது தெஹ்ரிக் இ ஜிகாத் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு என்றும் அண்மையில் தெஹ்ரிக் இ தாலிபன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பில் இருந்து பிரிந்த நிலையில், இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி, லாகூரில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் விமானப் படையின் மியான்வாலி பயிற்சி விமான தளத்தை தெஹ்ரிக் இ ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கி, மூன்று விமானங்களை சேதப்படுத்தினர். பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு சட்டவிரோத செயல்களைல் இந்த பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட தெஹ்ரிக் இ ஜிகாத் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்புகளுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க :கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! என்ஐஏ கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல்!