லிமா:தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் வலுத்து வருகின்றன. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக அதிபர் கேஸ்டிலோ கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் பொலுவார்ட் அதிபராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் அமைச்சரவையைக் கலைத்து, மீண்டும் தேர்தல் நடத்தி ஆட்சியைக் கைப்பற்ற பொலுவார்ட் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பொலுவார்ட் அதிருப்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது பாதுகாப்புப் படை கண்மூடித்தன தாக்குதல் நடத்தி வருகிறது.
பாதுகாப்பு வீரர்களின் தாக்குதலால் ஏறத்தாழ 55 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தலைநகர் லிமாவில் உள்ள பல்கலைக்கழகத்தைத் தலைமையிடமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புப் படை நடத்திய இரக்கமில்லாத தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.