தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் கனமழை... ஒரே நாளில் 36 பேர் பலி... 145 பேர் காயம்... - பஞ்சாப் மாகாணம்

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நேற்று (ஆக. 20) ஒரே நாளில் மட்டும் 36 பேர் உயிரிழந்ததாகவும், 145 பேருக்கு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கனமழை
பாகிஸ்தானில் கனமழை

By

Published : Aug 21, 2022, 1:41 PM IST

இஸ்லாமாபாத்: இதுகுறித்து பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் தீவிர பருவமழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் தூண்டிப்பு, அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு சிந்து மாகாணத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்த நிலையில், 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் 11 பேரும், பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று (ஆக. 20) ஒரே நாளில் மட்டும் 36 பேர் உயிரிழந்தனர்.

அந்த பகுதிகளில் 27 ஆயிரத்து 870 வீடுகள் சேதமடைந்துள்ளன். அதில், 10 ஆயிரத்து 860 வீடுகள் முழுமையாகவும், 17,010 வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானில்ஜூன் மாதம் தொடங்கிய பருவமழையால் இதுவரை 156 பெண்கள், 263 குழந்தைகள் உள்பட 728 பேர் உயிரிழந்துள்ளனர். 1,291 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 771 வீடுகளும், 129 பாலங்கள், 50 கடைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு உடன், தன்னார்வளர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மீட்புப்பணியிலும், நிவாரணப்பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஹிமாச்சல், உத்தரகாண்டில் வெளுத்து வாங்கும் கனமழை... 25 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details