இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து குவெட்டா நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து சோப் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், "சோப் மலைப்பாதையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.