பெய்ஜிங்:தெற்கு சீனாவில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, விமானம் மற்றும் ரயில் பயணங்களில் தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில், ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக இன்று (ஜனவரி 8) கோர விபத்து நடந்துள்ளது. ஜியாங்சியின் நான்சாங் நகரில் இருக்கும் மக்கள் வாரவிடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் நேற்றிரவு முதல் நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சீனாவில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 17 பேர் உயிரிழப்பு - travel rush Nanchang
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நகருக்கு வெளியே நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்துகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை