தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மெக்சிகோ சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு - 14 பேர் உயிரிழப்பு - ஜெயிலர் மீது துப்பாக்கிச்சூடு

மெக்சிகோவில் உள்ள சிறைச்சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு
மெக்சிகோ சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு

By

Published : Jan 2, 2023, 1:35 PM IST

Updated : Jan 2, 2023, 3:33 PM IST

மெக்சிகோ சிட்டி:அமெரிக்காவின் மெக்சிகோவுக்கும் டெக்சாஸூக்கும் எல்லையில் சியுடாட் ஜுவரெஸ் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள சிறைச்சாலைக்குள் நேற்று (ஜனவரி 1) துப்பாக்கிகளுடன் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 காவலர்களும், 4 கைதிகளும் கொல்லப்பட்டனர்.

இதுதவிர சம்பவத்தின்போது 13 பேர் காயமடைந்தாகவும், 24 கைதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில கைதிகளை மெக்சிகன் பாதுகாப்பு படையினரும் மாநில காவல்துறையினரும் இணைந்து மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கும் தப்பியோடிய கைதிகளுக்கும் தொடர்பு இருக்காலம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மெக்சிகன் சிறைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, எல்லை பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இந்த கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன என்று உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.

இதையும் படிங்க:பாகிஸ்தான் சிறையில் 700 இந்தியர்கள் தவிப்பு - வெளியுறவுத்துறை தகவல்

Last Updated : Jan 2, 2023, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details