துபாய் நாட்டில் மெரினா பகுதியில் நடைபெற்ற பிரபல ஃபேஷன் ஷோ (Fashion Show) நிகழ்ச்சியில் 142 கோடி மதிப்புள்ள தங்க செருப்பினை உருவாக்கி மக்கள் பார்வைக்காக வைத்து அசத்தியுள்ளனர்.மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்க செருப்பினை வடிவமைத்தவர் இத்தாலி நாட்டை சேர்ந்த அன்டோனியோ வியட்ரி(Antonio Vietri) என்பவர்தான். இவர் கடந்த 1579ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய விண்கல், 30 கேரட் வைரங்கள் ஆகிய பொருட்களால் தங்க செருப்பினை அலங்காரம் செய்துள்ளார்.
செருப்பில் விண்கல்லா?... உலகமே வியக்கும் 142 கோடி ரூபாய் மதிப்புள்ள ’தங்க செருப்பு’
அபுதாபி: ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் உலகிலேயே அதிக மதிப்புடைய தங்க செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செருப்பின் அடிப்பகுதியானது(heels) துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தங்க செருப்பின் விற்பனை விலையாக 1 கோடியே 99 லட்சம் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ. 142 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 1 கோடியே 55 லட்சம் டாலர் மதிப்பில் உருவாக்கிய செருப்பினை முந்தும்வகையில், துபாயில் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய தங்க செருப்பினை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.