இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி வந்த பெஞ்சமின் நெதன்யாகு அரசு, இன்றுடன் (ஜூன்.13) முடிவுக்கு வருகிறது. அவருக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் வலதுசாரி கூட்டணியுடன், அரபு கட்சிகள் கூட்டணி வைத்து புதிய கூட்டணி அரசை நிறுவியுள்ளன.
இந்தக் கூட்டணியின் பிரதமராக வலதுசாரி தேசியவாதியான நஃப்டாலி பென்னட் பதவியேற்கவுள்ளார். இந்த எதிர்பாரத கூட்டணி ஒரு இடமே அதிகம் கொண்டு, பெரும்பான்மை பெற்றுள்ளது.
கொள்கை ரீதியாக பல துருவங்களாகப் பிரிந்து கிடக்கும் எட்டுக் கட்சிகள் இணைந்து, இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணி அரசு பதவியேற்பதற்கான வாக்கெடுப்பு, இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
12 ஆண்டுகள் ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், இவரது அரசியல் சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வருகிறதா அல்லது பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு தனது அரசியல் வாழ்வை புதுப்பிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க:போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு அன்பளிப்பு வழங்கி அசத்திய ஜோ பைடன்!