தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும் - ஐநா

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கானிக்கும் அப்துல்லாவிற்கும் நிலவிவரும் பிரச்னையை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்க ஐநா வலியுறுத்தியுள்ளது.

UN concerned over Afghan election result crisis
அதிபர் அஷ்ரப் கானி

By

Published : Feb 23, 2020, 9:12 PM IST

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் தேர்தல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு அதில் அஷ்ரப் கானி மீண்டும் வெற்றிபெற்று அதிபரானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா தோல்வியடைந்ததை அடுத்து இந்தத் தேர்தல் முடிவுகளை அவர் முற்றிலும் ஏற்க மறுத்ததும் இல்லாமல் இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பின் அவர் தான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் கூறியும் வந்தார்.

தற்போது இதனால் அதிபர் அஷ்ரப் கானிக்கும் அப்துல்லாவின் தரப்பிற்கும் இடையே கடுமையான சூழல் நிலவிவருவதால் அந்நாட்டில் அரசியல் களத்தில் பதற்றமான சூழ்நிலையே நீடித்துவருகிறது.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு வருத்தம் தெரிவித்த ஐநா இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டம் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முறையில் குறைகளை நிவர்த்திசெய்து அமைதியை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அந்நாட்டு அரசியலின் பதற்றமான சூழ்நிலையைத் தணிக்கும்விதமாக அங்கு அமெரிக்க படைகளுக்கும் ஆப்பாக் படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம்செய்து பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தலிபானுடன் அமைதி ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பொய் முகத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் களம் காணுங்கள்' - மோகன் பகவத்துக்கு சவால்!

ABOUT THE AUTHOR

...view details