மத்திய கிழக்கு நாடான துருக்கியின் தென் பகுதியில் அமைந்துள்ளது ரெஹான்லி (Reyhanli) நகரம்.
இந்த நகரில் உள்ள ஆளூநர் மாளிகைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியதில், காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதற்கான காராணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும் துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன், இது பயங்கரவாத சம்பவம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சிரியா நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள நகரமே ரெஹான்லி. எனவே, பிலாயானவர்கள் அந்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்குத் துருக்கி ஆதரவு அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.