தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 15, 2019, 11:30 AM IST

ETV Bharat / international

நரியை வேட்டையாடிய கோழிகள்

பிரான்ஸ்: வட மேற்கு பிரான்சில் உள்ள பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிகள்

பிரிட்டானியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரீ ரேஞ்ச் கோழிகள் வளர்க்கும் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் அதிகபட்சம் ஆறாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்படும் அளவிற்கு இடம் உள்ளது.இந்த கோழி பண்ணையில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதால், கோழிகள் உள்ளே வந்தவுடன் கதவு தானாக மூடிக்கொள்ளும். இந்நிலையில் இளம் நரி ஒன்று கோழி பண்ணைக்குள் இரவு நேரத்தில் நுழைந்தவுடன் கதவுகள் தானாக மூடிக் கொண்டன. கோழிகளை பார்த்தவுடன் தாக்க முயன்ற நரியை அனைத்து கோழிகளும் இணைந்து கொத்தி கொன்றிருக்கின்றன.

கோழிகளிடம் ஏற்பட்ட மந்தையுணர்வால் இது நடந்திருப்பதாகவும், அந்த கோழிகள் இணைந்து நரியின் கழுத்தில் கொத்தி கொன்றிருக்கின்றன என கிராஸ்சீன் விவசாய பள்ளியின் துறை தலைவர் பாஸ்கல் டேனியல் தெரிவித்துள்ளார்.கோழிகள் பகல் பொழுதில் கூண்டில் அடைத்து வைக்கப்படாமல் வெளியே நேரத்தை செலவிடும். இரவில் மீண்டும் அந்த பெரிய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்படும். பகல் பொழுதில் கூண்டின் கதவுகள் திறந்தே இருக்கும்.

நரி உள்ளே சிக்கிய பிறகு கோழிகள் மிகப்பெரிய எண்ணிக்கையில் கூட்டமாக உள்ளே நுழைந்ததை பார்த்து பயந்து போயிருக்கக்கூடும் என உள்ளூர் பிராந்திய செய்தித்தாளான குவெஸ்ட் பிரான்ஸிடம் டேனியல் தெரிவித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details