தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உயிர்போகும் நேரத்தில் தங்கையை காப்பாற்றிய சிறுமி: நெஞ்சை உருக்கும் புகைப்படம்! - கிளர்ச்சிபடை

சிரியா: உயிர் பிரியும் நேரத்தில் தனது தங்கையின் உயிரை காப்பாற்றும் சிறுமியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

siriya

By

Published : Jul 27, 2019, 1:01 PM IST

சிரியாவில் அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதலில் ஐந்துமாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்திலிருந்த அம்ஜத் அல் அப்துல்லா என்பவர் வீடும் நொறுங்கியது. வீட்டில் இருந்து அப்துல்லா, அவர் மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது தனது ஏழு மாத தங்கை துகா கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இதனால் அந்த குழந்தை குழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது. ஆனால் தங்கையை காப்பாற்றிய சிறுமி ரிஹாம் உயிரிழந்தார்.

இந்த புகைப்படத்தை அந்நாட்டு எஸ்ஒய் 24 என்ற இணைய இதழின் புகைப்படக் கலைஞர் பாஷார் அல் ஷேக் என்பவர் வெளியிட்டுள்ளார். குழந்தைகளை பார்த்து ஒருவர் கதறியபடி தலையில் கைவைத்துக் கொணடிருக்கிறார். கீழே குழந்தைகள் உயிருக்கு போராடும்படி அமைந்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details