ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வட கிழக்கு சிரியாவை மீட்க அமெரிக்கா கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போராடி வந்தது. அமெரிக்கப் படைகளுக்குத் துணையாக குர்து போராளிகள் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படையினர் செயல்பட்டனர்.
இந்நிலையில் சிரியாவிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து துருக்கி மீண்டும் சிரிய படைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குர்து போராளிகளின் சிரியா ஜனநாயகப் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 75 துருக்கி ரானுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதேபோல் 19 துருக்கி ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குர்து ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.