வடகிழக்கு சிரியாவில் அமெரிக்க விமானப் படையினர் நேற்று(அக்.23) MQ-9 விமானம் மூலம் வான்வெளித்தாக்குதல் நடத்தினர். அங்கு அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக அமெரிக்க படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், அல்கொய்தாவின் முக்கிய தளபதி அப்துல் ஹமித் அல்-மதார் உயிரிழந்தார். இதை அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்கொய்தா அமைப்பு தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ள சிரியா பிராந்தியத்தை பயன்படுத்திவருகிறது.