தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சவுதி மீது தொடுக்கப்பட்ட போரே எண்ணெய் ஆலை தாக்குதல் : பாம்பியோ - saudi oil attacks

ரியாத் : சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் என்பது அந்நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் கூறியுள்ளார்.

pompeo

By

Published : Sep 19, 2019, 7:19 AM IST

சவுதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் ஆலை, எண்ணெய் வயல்கள் மீது கடந்த 14ஆம் தேதி (சனிக்கிழமை) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

சவுதி எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்திஸ் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அதேவேளையில், இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ தற்போது சவுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாம்பியோ, சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் என்பது அந்நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சவுதி எண்ணெய் தாக்குதலில் ஈரானுக்கு பங்குண்டு: சவுதி அரசு (Link)

ABOUT THE AUTHOR

...view details