அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம், துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று முன்தினம் மக்கள் தாயகம் திரும்புவதற்கான பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம் என அறிவித்திருந்தது.
இதையடுத்து, முன்பதிவிற்கான தளம் சிறிது நேரத்திலே தொழில்நுட்பக் கோளாறுகளால் முடக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அரசு முன்பதிவு செய்வதற்கான ட்வீட்டை நீக்கியது.
இதையடுத்து, நேற்று மீண்டும் முன்பதிவிற்கான தளம் செயல்படத் தொடங்கியதையடுத்து, நேற்று மாலை ஐந்து மணிவரை 32 ஆயிரம் பேர் இந்தியா திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இருந்தபோதும், விண்ணப்பித்த அனைவரையும் பெருந்தொற்று காலத்தில் நாடு திரும்ப அனுமதிக்க முடியாது எனவும், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
இதையும் பார்க்க:நான்கு லட்சம் மலையாளிகள் கேரளா திரும்ப விருப்பம்!