ஜெனிவாவில் சர்வதேச மனித உரிமைகள் சபையின் 40வது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஈடுபடும் பயங்கரவாதத்தை ஓழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமைகள் சபை கண்டனம்
ஜெனிவா: பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு சர்வதேச மனித உரிமைகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
பின்னர் யூ.என்.ஹெச்.ஆர்.சி. சார்பில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாகிஸ்தான் ராணுவம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்கொலைப்படை தாக்குதல், மதத்தின் பேரில் ஏற்படுத்தப்படும் கலவரங்கள் உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.