கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த பட்டியலில் நியூசிலாந்தும் தற்போது இணைந்துள்ளது. முதற்கட்டகமாக, ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த நியூசிலாந்து அரசு தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது.
ஃபைசர் தடுப்பூசிக்கு ஓகே சொன்ன நியூசிலாந்து - coronavirus vaccine
வெலிங்டன்: கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தாக ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நியூசிலாந்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. ஆனாலும் எல்லையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டு மக்களை அவர்கள் சந்திக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக ஃபைசர் தடுப்பூசியை மார்ச் மாத இறுதிக்குள், எல்லையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
இதையும் படிங்க:அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறேன்' - ஜெஃப் பெசோஸ் திடீர் முடிவின் காரணம் என்ன?