தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புதிய பாகிஸ்தானுக்கு புதிய செயல் தேவை -வெளியுறவு அமைச்சகம் - imran khan

டெல்லி: வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புதிய பாகிஸ்தான் மலர வேண்டுமானால் புதிய செயல்கள் தேவை என்றார்.

imran_modi

By

Published : Mar 9, 2019, 5:55 PM IST

வெளியுறவு துறை சார்பில் செய்தியாளர் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பாகிஸ்தானின் தலைவர்கள் கூறுவதுபோல் 'புதிய பாகிஸ்தான்' மலர வேண்டுமானால் அவர்கள் 'புதிய சிந்தனைகளை' பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய செயல்களின் மூலம் நிரூபிக்க வேண்டும்.

அபிநந்தனுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. புல்வாமா தாக்குதலை தவிர்த்து வேறு எந்தவித ராணுவ நடவடிக்கையும் இந்திய தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை எனக் கூறினார்.


ஜெய்ஷ்- இ-முகமதின் வேர்கள் பாகிஸ்தானில் தான் உள்ளது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருவது கண்டனத்துக்குரியது என்றும், தாங்கள் அனுப்பிய ஆதாரங்களை பாகிஸ்தான் அசட்டை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details