சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் 29 வயதான யெய்ர், தனது தந்தையின் ஊழல் வழக்கு வழக்கறிஞரான லியாட் பென் ஆரியின் முகத்துடன், இந்து தெய்வமான துர்காவின் புகைப்படத்தை இணைத்து ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் அவரை இந்தியர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தனர். மேற்கத்திய நாடுகளில் இந்து நம்பிக்கை பற்றிய பொதுவான அறியாமையே இதுபோன்ற செயல்களுக்கு காரணம் என்று பதிவிட்டனர்.
இந்துக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மகன்!
ஜெருசலேம்: இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த மகன் யெய்ர் இந்துக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
யெய்ரின் ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், "நான் ஒரு நையாண்டி பக்கத்திலிருந்து அப்புகைப்படத்தை (துர்காவின் புகைப்படம்) எடுத்து பதிவிட்டு, இஸ்ரேலில் உள்ள அரசியல் பிரமுகர்களை விமர்சித்தேன். அந்தப் படத்தில் இந்துக்கள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்று எனது இந்திய நண்பர்களின் கருத்துக்களிலிருந்து நான் அறிந்துகொண்டேன். அந்த ட்வீட்டை அகற்றிவிட்டேன். நான் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று மற்றொரு ட்வீட்டில் யெய்ர் தெரிவித்துள்ளார்.