நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஐந்து இந்தியர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் முன்பு க்ரேஸ்டோன் என்பவர் கையில் பதாகையுடன் "நீங்கள் என் நண்பர்கள். உங்களை நான் கவனிப்பேன்" என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மசூதி நுழைவு வாயிலின் முன்பு நிற்பதை பார்த்த பலரும் அவரது அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் வெளியான பதிவு ஒன்றிற்கு க்ரேயோன்ஸ்டனின் மகள் ரூத் கெய்ல் "இவர் என் தந்தை. அவரது மகளாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என பதிலளித்திருந்தார். இதனை சமூக வலைதள வாசிகள் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துவருகின்றனர்.