தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'தந்தையைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு; தீர்ப்பைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'

துபாய்: தங்கள் தந்தையைக் கொன்ற ஐந்து குற்றவாளிகளைத் தாங்கள் மன்னித்துவிட்டதாகவும் தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிடுவதாகவும் மறைந்த பிரபல செய்தியாளர் ஜமால் கஷோகியின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

By

Published : May 23, 2020, 9:33 AM IST

Updated : May 23, 2020, 9:55 AM IST

Jamal
Jamal

அமெரிக்கவைச் சேரந்த வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தி நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய ஜமால் கஷோகி, சவுதி அரசை தொடர்ச்சியாக விமர்சித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இதன் காரணமாக, துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் வைத்து 2018 அக்டோபர் 2ஆம் தேதி அவர் படுகொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஐந்து பேர் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த ஐவரையும் மன்னித்துவிடுவதாக ஜமால் கஷோகியின் நான்கு பிள்ளைகளும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, ஜமால் கஷோகியின் பிள்ளைகளில் ஒருவரான சாலா கஷோகி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஜமால் கஷோகியின் பிள்ளைகளான நாங்கள் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து இதற்கான தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிடுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஐவரும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மேலும் அவர், "புனித மாதமான ரமலான் மாதத்தில் மன்னிக்கும் பண்பை ஒருவர் வெளிப்படுத்தும்போது இறைவனிடமிருந்து அவருக்கு ஆசி கிடைக்கிறது. எனவே இந்த முடிவை தற்போது மேற்கொண்டோம்" எனக் கூறியுள்ளார்.

ஜமால் கஷோகியின் கொலையை சவுதி அரச குடும்பத்தின் தூண்டுதலில்தான் ஐவரும் செய்ததாகக் குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

இதையும் படிங்க:காலநிலை மாற்றத்துக்கும் கரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை!

Last Updated : May 23, 2020, 9:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details