கஜகஸ்தான் சோவியத் ஒன்றியத்திடமிருந்து 1991ஆம் ஆண்டு பிரிந்து தனிநாடானது. அன்றிலிருந்த தற்போது வரை 29 ஆண்டுகளாக அந்நாட்டு அதிபரகா பதவி வகித்துவரும் நூர்சுல்தான் நசர்பயேவ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
29 ஆண்டுகளுக்கு பிறகு பதவி விலகும் கஜகஸ்தான் அதிபர் - நூர்சுல்தான் நசர்பயேவ்
அஸ்தானா: 29 ஆண்டுகளாக கஜகஸ்தான் அதிபராக பதவிவகித்து வந்த 78 வயதான நூர்சுல்தான் நசர்பயேவ் தன் பதவி விலகலை அறிவித்தார்.
கசக்கஸ்தான்
நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் பதவி விலகலை அறிவித்தார் நசர்பயேவ். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆண்டோடு 30 வருடங்களாக தான் அதிபராக இருந்துவிட்டேன், இந்த நாட்டின் மூத்தத் தலைவர் என்ற முறையில் எனது பணியானது இனி இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவது என்று கூறியுள்ளார்.
கஜகஸ்தான் நாடு, ரஷிய-சீன எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும், எண்ணெய் வளம் கொழிக்கும் நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.