பாகிஸ்தான் அமைச்சர் பஃஹத் செளத்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான் தான் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தலைமையின்கீழ், இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனவும்; புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி எனவும் சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற ராணுவம் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று தெரிவித்த இந்தியா, அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானினில் உள்ள பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் அரசின் சாதனை, பிரதமர் இம்ரான்கான் அதற்கு பாராட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க:பாகிஸ்தான் பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு: 55 பேர் கைது!