இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன் நாட்டின் காஸா பகுதியை கட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவருகிறது.
தற்போது, இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் 430 ஏவுகணைகளை ஏவுயுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஸ்ரேல் பாதுகாப்புப் படை ட்வீட் இதில், பொரும்பாலான ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஸா பகுதியை நோக்கி 120 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.
ஸ்ரேல் பாதுகாப்புப் படை ட்வீட் இருதரப்பினருக்கும் இடையே, கடந்த வெள்ளிக்கிழமை முதல், நடைபெற்றவரும் மோதலில் சுமார் 10 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
இதற்கிடையே, காஸா பகுதியில் வாழும் 5000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக காஜா-இஸ்ரேல் எல்லை அருகே போராட்டம் நடத்திவருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.