கரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் பதம் பார்த்துவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை, வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஹோட்டல்களை மூட பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்நாட்டு பிரமதரின் உதவியாளர்களில் ஒருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 70 வயதான இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கும், அவரது குடும்பத்திற்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இருப்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.