உலகம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாளுக்கு நாள் இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே-வருகிறது.
இஸ்ரேலில் இதனால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்த நிலையில், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம், இஸ்ரேல் நாட்டு மக்கள், இஸ்ரேலில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்றவர்கள் உள்நுழைய தடைவிதித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து தப்ப பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவந்த நிலையில் இஸ்ரேலும் அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடியுள்ளது. மேலும், எகிப்து, ஜோர்டன் நாடுகளுடனான எல்லைப் பகுதிகளை மூடவும் ஆலோசித்துவருகிறது.