இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் எல்லைப் பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படையினரை வெளியேற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இத்தகைய சூழலில் காஸா பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் அவ்வப்போது வான்வழித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுகிழமை) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவின் பேரில் ஹமாஸ் படையினருக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கு, தொழிற்சாலை உள்ளிட்டவற்றை குறிவைத்து 600 ராக்கெட் மூலம் சுமார் 36 மணி நேரம் தொடர் தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்புப் படை நடத்தியது.