தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனா - ஈரானில் உயிரிழப்பு 291ஆக உயர்வு! - Corona virus iran latest news

தெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது.

iran corona virus
iran corona virus

By

Published : Mar 10, 2020, 8:44 PM IST

சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட் -19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய இந்த நோய் காரணமாக இதுவரை மூன்று ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானில் கோவிட்-19 காரணமாக இன்று மேலும் 54 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கியாநௌஷ் ஜாஹான்பூர் தெரிவித்தார். இதன்மூலம், அந்நாட்டில் பலி எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஈரானில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி அந்நாட்டில் எட்டு ஆயிரத்து 600 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க :'அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா இல்லை' - அமெரிக்கா

ABOUT THE AUTHOR

...view details