தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொடூரக் கொரோனா : ஈரானில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு - corona virus latest news tamil

தெஹ்ரான்: கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் இன்று மட்டும் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

iran corona virus
iran corona virus

By

Published : Mar 8, 2020, 8:00 PM IST

சீனா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2019 டிசம்பர் இறுதியில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸால் உலகளவில் இதுவரை மூன்று ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், மத்திய கிழக்கு நாடான ஈரானில் இன்று மேலும் 49 பேர் உயிரிழ்ந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அந்நாட்டில் வைரஸ் பரவ ஆரம்பித்த ஒரே நாளில் இத்தனை பேர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.

இதன்மூலம், கொவிட்-19 தாக்குதலால் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது. ஆறு ஆயிரத்து 566 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details