செம்னன் மாகாணம்: பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ஈரான் அதிகமான ட்ரோன்களை இயக்கவுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பதற்ற சூழல் - அதிகமான ட்ரோன்களை இயக்கும் ஈரான்
பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ஈரான் அதிகமான ட்ரோன்களை இயக்கவுள்ளது. அதேபோல் நிலத்தடியில் யுரேனியத்தை 20% வரை உயர்த்தும் வேலையை செய்துவருகிறது.
Iran prepares for drone
மத்திய ஈரானின் பாலைவனப் பகுதியில் பல ட்ரோன்கள் பறக்க தயார் நிலையில் உள்ள வீடியோ ஊடகங்களில் வெளியானது. யுரேனியத்தை 20% வரை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரான், ஹர்முஸ் நீரிணை பகுதியில் இருந்த தென் கொரியாவின் ஆயில் டேங்கரை கைப்பற்றியது மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 அணு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருதலைபட்சமாக திரும்பப்பெற்றதில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.