துபாய்:அமெரிக்கா அணு சக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பதட்டம் நிலவிவரும் சூழ்நிலையில், ஈரான் போர்டோவில் நிலத்துக்கடியில் அணுசக்தி நிலையத்துக்கான ஒரு கட்டுமானத்தை மேற்கொண்டுவருவதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அதுதொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
போர்டோவில் புதிதாக கட்டுமானம் மேற்கொண்டுவருவதாக ஈரான் அரசு பொதுவெளியில் எங்கும் கூறவில்லை. ஆனால், இந்தப்பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு மாற்றத்தையும் கவனமாக கவனிக்கவேண்டும் என ஈரானை அரசியலை தொடர்ச்சியாக கவனித்துவரும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
போர்டோ பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானத்தின் வேலைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. போர்டோவில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டுமானம் வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் மலைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிராம்ப் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு தலைபட்சமாக வெளியேறினார். பொருளாதார தடைகளை நீக்குவதற்கு யுரேனிய செறிவூட்டலை மட்டுப்படுத்த ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், பிராந்திய அரசியல் உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.