டெல்லி:சவுதி அரேபியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வளர்ந்துவரும் சூழ்நிலையில், இரு நாடுகளும் இணைந்து கடற்படை கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டுள்ளன. திங்களன்று தொடங்கிய இப்பயிற்சி நேற்று நிறைவடைந்தது. இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் முதல் கடற்படை பயிற்சி இதுவாகும்.
இந்தப் பயிற்சிகளுக்காக, ஏவுகணைகளை தாக்கி அளிக்கும் ஐஎன்எஸ் கொச்சி போர் கப்பல் கடந்த திங்களன்று சவுதி அரேபியாவுக்கு சென்றது. அங்கு, சவுதி கடற்படை உற்சாக வரவேற்பு அளித்தது.
மூன்று நாள்கள் நடைபெற்ற இப்பயிற்சியில், அடிவானத்தில் விமானத்தில் பறந்து இலக்கை தாக்கி அழிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் எடுக்கப்பட்டன.